கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை… மருத்துவத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என மருத்துவ துறை அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால்  மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என மருத்துவத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிலும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மருத்துவத்துறை கூறியுள்ளது.