கொரோனா பரவல்…. கல்வி நிறுவனம் மூடல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவி வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது.

அதன்படி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி மறு அறிவிப்பு வரும் வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும் என்றும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று துணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.