கொரோனா நோயாளி அருகில் வந்தால்…. எச்சரிக்கும் கருவி… அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியை பீகாரை சேர்ந்த சகோதரர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பீகாரை சேர்ந்த அர்பித் குமார் மற்றும் அவர் சகோதரர் அபிஜித் குமார் இருவரும் இணைந்து கொரோணா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவிக்கு சி டி டி எம் என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கருவியானது உடலின் வெப்பநிலையை கணக்கிட்டு மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் தகவலை கடத்துகிறது. இதற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *