கொரோனா தொடர்பான உதவிக்கு…. என்னுடைய இந்த நம்பருக்கு அழையுங்கள் – சுகாதாரத்துறை அமைச்சர்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைத்திட பலரு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொடர்பாக உதவி வேண்டியவர்கள் தன்னை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மொபைல் எண்:9176700000, போன் நம்பர்: 044-22500999 ஆகிய எனலை தொடர்பு கொள்ளலாம். மருத்துவமனை தொடர்பான தகவலுக்கு வாட்ஸ் அப் செய்யவும். உடனே திருப்பி அழைப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *