கொரோனா தடுப்பூசி… 2-வது டோஸ் எடுத்துக்கொண்டார் ஸ்டாலின்…!!

கொடைக்கானலில் இருந்து திரும்பிய முக ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் கொடைக்கானலில் சென்று சென்னை திரும்பி திமுக தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தாங்கள் மருத்துவரை கலந்து ஆலோசனை செய்து விட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும் நமது நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என கூறியுள்ளார்.