கொரோனா காலத்தில்…. அரசு செய்யவேண்டியதை திமுக செய்தது…. மு.க. ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில் சோழிங்கநல்லூரில் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா அரசு செய்யவேண்டியதை திமுக செய்தது. காய்கறிகள், மளிகை பொருட்கள் கொடுத்தும், அவசர தேவைக்கு அலைபேசி எண்ணை கொடுத்தும் மக்களுக்கு சிறப்பான பணியாற்றியது என்று தெரிவித்துள்ளார்.