கொரோனா எதிரொலி!…. வரும் 24 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்…. மாநில அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. எனினும் தடுப்பூசி நடவடிக்கைகள், கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று முதல் அலை, 2ஆம் அலையைப் போல் அல்லாமல் உயிரிழப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது கொரோனா 4வது அலை தற்போது தொடங்கி இருக்கிறது. இதனால் சிறு உடல்நிலை பிரச்சினைகள் ஏற்பட்டாலும், உடனே அரசு மருத்துவமனைக்கு போக சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மணிப்பூரில் கோடை விடுமுறை முடிந்து பல பள்ளிகள் ஜூலை 16ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வரும் 24 ம் தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும்மணிப்பூரில் தொற்று விகிதமானது 15 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரித்து வரும் சூழலில், பள்ளிகள் அனைத்தும் வரும் 24-ம் தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மணிப்பூரில் சென்ற திங்கள்கிழமை 47 நபர்களுக்கும், செவ்வாய்கிழமை 59 பேருக்கும் கொரோனா பாதிப்பானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணிப்பூரில் மொத்த பாதிப்பானது 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் இருக்கிறது. அதே நேரம் மாநிலத்தில் மொத்தம் 2,120 பேர் இறந்துள்ளனர். தொற்று விகிதம் 15.6 % என்ற அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.