கொரோனா எதிரொலி – தூத்துக்குடி துறைமுகத்தில் கடும் கட்டுப்பாடு..!!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில், கட்டுப்பாடுகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொருத்தவரை வைரஸ் காரணமாக துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும், அதிலுள்ள  பணியாளர்கள் அனைவருக்கும் ஸ்கேன் மூலமாக ஸ்கிரீனிங் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல்களில் சரக்குகள் இறக்கப்டுகின்றது.

இதனைத்தொடர்ந்து கப்பல்களில் இருந்து யாரும் சிப்பந்திகள், மாலுமிகள் உள்ளிட்ட யாரும் தரைதளத்தில் இறங்கக் கூடாது என்று உத்தரவு விடுத்தது, சரக்கு கப்பல்கள் தளத்தில் நிறுத்தப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை பொருத்தவரை ஏற்றுமதி-இறக்குமதி கிட்டத்தட்ட 30 முதல் 40% வரை சரிந்துள்ளது என தெரிவித்துள்ளனர், துறைமுக உபயோகிப்பாளர்கள்.

குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் இயந்திரத் தளவாடங்கள் ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. தற்பொழுது அந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படாததால், இறக்குமதியாளர்கள் மிகவும் பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளனர். ஏற்றுமதியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் சரக்குகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது முற்றிலுமாக கிட்டத்தட்ட 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.