கொரோனா எதிரொலி… சென்னையில் இன்று முதல் மீண்டும் அமல்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று முதல் மீண்டும் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டம் அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்ததால், ஊரடங்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் மீண்டும் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டம் அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு கட்டுப்பாட்டுப் பகுதிகள், கொரோனா அதிகமாகும் மண்டலங்களில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக கோரோணா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *