கொரோனா இருந்தால் இனி வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது… அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. ஒரு சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பாதித்த சிலர் வீட்டில் தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது.

அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோணா பாதித்தவர்கள் வீட்டில் தனிமை படுத்த கூடாது. உடனே மருத்துவமனையில் சேர வேண்டும். 14 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

கட்டாயம் விட்டு தனிமையில் வேண்டுவோரின் வீடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். வீட்டில் உள்ள வசதிகளைப் பொறுத்து அனுமதி வழங்குவது பற்றி அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.அவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *