கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் ஆயுதம்…. முதல் டோஸ் போட்டுக்கொண்ட…. உதயநிதி ஸ்டாலின் டுவிட்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் நம் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *