கொரோனாவை விட வேகம்….! ”பரவும் புதிய வகை வைரஸ்”… மக்களுக்கு எச்சரிக்கை …!!

பிரிட்டனில் அதிவேகமாக பரவக்கூடிய தன்மை உடைய புதிய கொரோனவைரஸ் பரவுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கொரோனவைரஸ் தாக்கம் காரணமாக உலகமெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளதால் நோய் தொற்று கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் முந்தைய வைரஸ் விட 70 சதவீதம் அதிகமாக பரவக் கூடியது எனவும் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.  லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதியில் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு  வருவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் கடைகளில் குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *