கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு…. இனி இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு…. அதிரடி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சிஏ படிப்பிற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த விலக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய ICITSS மற்றும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம், மேம்பட்ட நோக்குநிலை படிப்பு உள்ளடக்கிய AICISS, நிர்வாகம் மற்றும் தொலைத் தொடர்புத் திறன் என சி ஏ படிப்பின் அனைத்து நிலைகளுக்கான பதிவு கட்டணத்திலிருந்து கொரோனாவால் பெற்றோரை இழந்த அனைவருக்கும் இந்த விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. www.icai.orgஎன்ற இணையதள பக்கத்தில் தந்தை அல்லது தாய் கொரோனாவால் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழை பதிவேற்றம் செய்து படிப்பிற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *