அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போரை நிறுத்த முன்மொழிந்துள்ளார். இதனை ஏற்று ஐநா சபை போரை நிறுத்த இருவருக்கும் அழைப்பு விடுத்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் போரை நிறுத்துவதற்கு ‌ முன்வந்துள்ளனர். அவர்கள் போரை நிறுத்துவதற்கு சம்மதம் தெரிவித்ததோடு பிணையை கைதிகளை விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதற்கு தற்போது இஸ்ரேல் ஒத்துழைக்குமா இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதாவது கடந்த வருடம் கமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பலரை பிணைய கைதிகளாக பிடித்தது.

இதைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போரைத் தொடர்ந்தது. இந்தப் போர் ஒரு வருடம் தாண்டியும் நடைபெறும் நிலையில் காசாவில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் போர் மூலம் கொன்று குவித்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் தற்போது அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவியும் போதும் இஸ்ரேல் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. மேலும் தற்போது கமாஸ் அமைப்பினர் போரை நிறுத்த முன் வந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனை ஏற்று இஸ்ரேல் போரை நிறுத்துமா? இல்லையா? என்பதுதான் உலக நாடுகளின் கேள்விக்குறியாக இருக்கிறது.