தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

ஈக்வடாரில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மனோஸ்டி, அக்வார், சாந்தா நகரில் நேற்று பெரிய அளவில் என நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.