கொடூர சம்பவம்….. ஒரு நாளைக்கு 15 பேர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார்….!!!!

சிறுமி  ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்அமைந்துள்ள ஒரு அழகு நிலையத்தில்   வேலை பார்த்த ஒரு சிறுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நான் குரூக்ராம் செக்டார் 49-ல் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத காரணத்தால் பல இடங்களில் வேலை தேடி கொண்டிருந்தேன். இப்போது எனக்கு பூஜா என்பவர் அறிமுகமானார். அவர் என்னை ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஆனால் இரண்டு நாளிலேயே அவர்கள் என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். அடுத்த நாள் மீண்டும் வேலை தேடு தொடங்கினேன். அப்போது பூஜா என்னை மீண்டும் சந்தித்து  கிங் ஸ்பா என்ற அழகு நிலையத்தில் என்னை வரவேற்பாளர் பணியில் சேர்த்து விட்டார். அங்கு ஜிமா என்பவர் இருந்தார். அவரை பூஜா எனது அத்தை என கூறினார். மேலும் நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்து எனக்கு சோதனை தொடங்கிவிட்டது .

என்னை அவர்கள் ஸ்பாவில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். பின் அங்கு வைத்து எனக்கு பாலியல் தொல்லை அளித்தனர். அதிலும் ஒரு நாளைக்கு  15 பேர் வரை வன்கொடுமை செய்தனர். பின்னர் நான் நடந்துவற்றை என் தாயிடம் கூறிவிட்டு வேலையை விட்டு விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள். இதனால் நானும் என் அம்மாவும் ஆபத்தில் உள்ளோம். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது. புகார் அளித்த பெண் வயது தொடர்பான ஆவணம் எதையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவர்  மைனரா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் போச்சே சட்டம் மற்றும் 376டி,323,506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் சிறுமிக்கி  பாலியல் தொல்லை கொடுத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்