டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங்(20) என்னும் இளம் பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. புத்தாண்டு இரவில் அந்த இளம் பெண் வேலை காரணமாக வெளியே சென்ற அவர்  நள்ளிரவு நேரத்தில்  வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் வடமேற்கு டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் அந்த இளம் பெண்ணின் ஸ்கூட்டர் மீது குடிபோதையில் 5 பேர் வந்த கார் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

ஆனால் விபத்து நடைபெற்ற போது காரில் இருந்த  ஐந்து பேர் காரை நிறுத்துவதற்கு பதிலாக அந்த பெண்ணின் உடலை 13 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கஞ்சவாலா சாலையில் கடை வைத்திருக்கும் நபர் இந்த சம்பவத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாலை 3.30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டனர். அதன் பின் கார் நம்பரை வைத்து அந்த காரில் பயணம் செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அந்த ஐந்து ஆண்களும் வன்புணர்வு செய்து கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் விபத்தை ஏற்படுத்தவில்லை. காரில் சென்று கொண்டிருக்கும்போது பாட்டு போட்டுக்  போய்க்கொண்டிருந்தோம். அதனால் எங்களுக்கு விபத்து நடைபெற்றது தெரியவில்லை என கூறியுள்ளனர்.

இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் அஞ்சலியின் தாயார் கூறியதாவது, எனது மகள் ஆடை அணிந்து இருந்தாள். ஆனால் அவள் உடலில் துணி இல்லை. இது எந்த வகையான விபத்து?. மேலும் எங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் எனது மகள் மட்டும்தான் என கூறி கதறி  அழுதுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.