
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நான்கு மர்ம நபர்கள் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.