சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை நேற்று காலை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தாம்பரம்- மதுரவாயில் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது வேன் ஒன்று மொபட் மீது உரசியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதனையடுத்து  பின்னால் வந்த மணல் லாரி ஒன்று ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கிய ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன ஷோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.