வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் தனது மகன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை ஆறுமுகம் (45) மகன் முத்துசாமியை (25) கத்தியால் குத்தி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் கோபத்தில்  தனது வீட்டில் இருந்து ஆடு உரிக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்துள்ளார். மகன் முத்துசாமி தந்தையை தேடிச் சென்று அடிக்க முயன்ற போது, ஆறுமுகம் தன்னிடம் இருந்த கத்தியை பயன்படுத்தி மகனை குத்தியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். மகன் இறந்த செய்தியை அறிந்த வேப்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். இறந்த முத்துசாமியின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மகன், மூன்று பெண் குழந்தைகள் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.