தேனி மாவட்டத்திலுள்ள கடமலைக்குண்டு வார சந்தை வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஆடுகளை கடித்ததாக கூறி சிலர் நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடமலைகுண்டு கால்நடை உதவி மருத்துவர் சதீஷ்குமார் நாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமி ராஜ், முருகன், மலைச்சாமி, செல்வம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.