“கொடூரமாக கொல்லப்பட்ட இளம் நடிகை”… பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!!

இளம் நடிகை கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த 26 வயதான நடிகை சார்லட் ஆங்கி. இவர் பல அடல்ட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லாம்பர் பிராந்தியத்தில் இருக்கும் பல்லி என்ற கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 மூட்டைகள் இருப்பதாக அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்த போது பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது அது இளம் நடிகையான சார்லட் ஆங்கி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியபோது நடிகையின் பக்கத்து வீட்டில் வசிக்கும் டேவிட்என்ற நாற்பத்தி மூன்று வயதாகிய வங்கி ஊழியரை கைது செய்தனர்.

டேவிட்டும் அந்த நடிகையும் காதலித்ததாகவும் சில நாட்களிலேயே பிரிந்து விட்டதாகவும் இதனால் கோபம் அடைந்த டேவிட் அவரை சுத்தியால் அடித்து கொன்று வீட்டின் பிரிட்ஜில் ஒரு மாதம் வைத்து இருக்கின்றார். அதன் பிறகு துண்டு துண்டுகளாக வெட்டி தூக்கி எறிந்துள்ளார். நடிகை மார்ச் 11 முதல் மார்ச் 13 வரை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்கு வராததால் ரசிகர்கருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் நடிகை காணாமல் போனதாக போலிசுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போதுதான் இறந்தது அந்த இளம் நடிகை என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்த நடிகைக்கு 6 வயதில் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இளம் நடிகை இப்படி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.