கொடூரத்தின் உச்சகட்டம்…. சிறுமி மீது ஆசிட் வீசிய வாலிபர்…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வருபவர் சனல்- நிஜிதா தம்பதியினர். சனல் கூலி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில மாதங்களாக நிஜிதா கணவரை பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று நிஜிதாவும் அவரது மகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவர்கள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டார். இதில் நிஜிதாவின் முகம் கருகியது. அவரது மகளுக்கும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது. ஆசிட் பட்டதில் இருவரும் வலியால் அலறி துடித்தனர். இவர்களின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *