“கொஞ்சம் பேசினால் என்ன”….. விக்னேஷ் சிவன் வெளியிட்ட டீசர்…. வைரல்….!!!!

தும்பா படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி பாண்டியனும், நான் மகான் அல்ல புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “கொஞ்சம் பேசினால் என்ன”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

சூப்பர்டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில், லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ்சிவன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் மீண்டுமாக சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.