சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு சிறுமி மஞ்சள் நிற ராட்சத மலைப் பாம்புடன் வீட்டில் விளையாடுவதை காண முடிகிறது. பாம்பு சிறுமியுடன் விளையாடும் போது, அது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. மேலும் அந்த மலைப் பாம்பு நேரடியாக சிறுமியின் முகத்தில் விழுந்து முத்தமிடுவதையும் காண முடிகிறது. பாம்பு தன்னை கொஞ்சி விளையாடும் நிலையிலும், அச்சிறுமி சிறிதும் அச்சப்படவில்லை. இந்த வீடியோவானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
OMG WTH?? pic.twitter.com/JywFen5lA5
— The Figen (@TheFigen_) March 18, 2023