கொஞ்சம் ஓரமாக நில்லுங்க…. தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தலைமை ஆசிரியரை தாக்கிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்காக சிலர் நின்றுள்ளனர். இதனால் அவர்களை சாலை ஓரமாக நிற்கும் படி பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் பார்த்திபனை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் காயம் அடைந்த பார்த்திபனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசன், சங்கர், வேல், முருகன், அஜித் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *