கொங்குநாடு – பாஜகவின் நிலைப்பாடு அல்ல…. ஏ.என்.எஸ் பிரசாந்த் விளக்கம்…..!!!!

தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்கொங்கு நாடு என்பது தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல. மாநிலத் தலைவரோ, பொதுச் செயலாளரோ கொங்குநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் ஏ.என்.எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். நம் தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக யாரும் தெரிவிக்க வேண்டாம். வளமான தமிழ்நாடு வலிமையான பாரதம் என்பதே பாஜகவின் லட்சியம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *