திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதம்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான பெருமாள் சம்பவம் நடைபெற்ற அன்று கொக்கை சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக பெருமாளின் தொடையில் பாய்ந்தது.

இதனால் படுகாயம் அடைந்த பெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் பெருமாள் மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.