கைவிட முடியாத பழக்கம்… ராணுவ வீரரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுபழக்கத்தை கைவிட முடியாததால் முன்னாள் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சிவாஜி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை கண்டித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் கண்ணன் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணன் வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தேனி காவல்துறையினர் கண்ணனின் உடலை மீட்டு உடற்கூராவிற்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *