கைவசம் இத்தனை படங்களா….? விரைவில் பான் இந்தியா இயக்குனராக அவதாரம்…. சினிமாவில் உச்சம் தொட்ட இயக்குனர்…!!!

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

கார்த்தி நடிப்பில் கைதி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் அடுத்த படைப்பாக கமலஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ராஜமவுலி தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம் இந்தப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் தயாரிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து அவர் கார்த்தியை வைத்து கைது 2 படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளாராம். லோகேஷ் கனகராஜ் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்தியா இயக்குனராக அவதாரம் எடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *