கேரள மாநில சட்டசபையில் இன்று 2023-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தாக்கல் செய்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு ரூ. 237.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று திருவனந்தபுரம் கொச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த 100 கோடியும், சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்துக்காக 30 கோடியும், முந்திரி ஆலைகளை நவீனப்படுத்த 2.20 கோடியும், அரசு பஸ் நிலையங்களை புதுப்பிக்க கூடுதலாக 20 கோடியும், நுன்னீர் பாசன திட்டங்களுக்காக 525 கோடியும், குழந்தைகளுக்கான நீரிழிவு நோயை தடுக்கும் மிதாயி திட்டத்திற்கு 3.8 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்கு ரூ. 237.27 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநில அரசு பெரும் கடலில் தவித்து வருவதாக பரவி வரும் தகவல்களுக்கு நிதியமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.