கேரளா: மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்….!!!!

கேரளாவில் சென்ற ஜூன்மாதம் 1ஆம் தேதி தென் மேற்கு பருவமழை துவங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பிறகு மெதுவாக குறைய தொடங்கியது. இந்நிலையில் சென்ற வாரம் முதல் கேரளா முழுதும் பரவலாக மழைபெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் வரும் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை திருவனந்தபுரம் தவிர்த்து மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் முதல் 5ஆம் தேதி வரை அதிதீவிர மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலம் முழுதும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மைதுறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உட்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *