கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் – பீதியில் பொதுமக்கள் …!!

கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில், ஜிகா வைரஸ் நோயும் பரவியது.

இந்த நோயால் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவத்திற்கு பின், அனைவரும் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோடு வந்த ஒரு பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கேரளாவில் இன்னும் குறையாத நிலையில், ஜிகா வைரஸ் மீண்டும் மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *