புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள  மது கடையில் மட்டும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 95 கோடியே 67 லட்சம் ரூபாயாக இருந்த மது விற்பனை இந்த வருடம் புத்தாண்டு பண்டிகைக்கு ரூ.17 கோடியே 14 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை தொடக்கத்திற்காக டிசம்பர் 27 முதல் 31-ஆம்  வரையிலான பத்து நாட்களிலும் 686 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த வருடம் 649 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.