ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அம்பேர்பெட் பகுதியைச் சேர்ந்த16 வயது சிறுவன் தனது தாயின் ஃபோனில் பிரீ பையர் கேம் இன்ஸ்டால் செய்து விளையாடி உள்ளார்.

இந்த கேமில் அடுத்தடுத்து லெவல் செல்வதற்கு சிறிது சிறிதாக பணம் செலவழிக்க தொடங்கியுள்ளார். அப்படியே வீட்டுக்கு தெரியாமல் சுமார் 36 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். தனது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்ததை தொடர்ந்து தாய் வங்கிக்கு சென்று விசாரிக்கும் போது தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.