“கேன்ஸ் விழா”…. டான்ஸ் ஆடிய தீபிகா படுகோனே…. வெளியான புகைப்படம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்விழாவில் தீபிகா படுகோனே ஒரு நடுவராக அமர்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் இந்தியா கவுரவமான நாடு என அதற்குரிய முக்கியத்துவத்தை கேன்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விழாவில் தான்சானியா கிராமிய பாடகர் மேமேகான் ஒரு பாடலைப் பாட தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் அங்கு இருந்த தீபிகா, தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே போன்றோர் அப்பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். இது தொடர்பாக தீபிகா கூறியதாவது, இன்றைய சூழ்நிலையில் இந்திய சினிமா உலகின் உச்சத்தில் உள்ளது. நான் கேன்ஸ் விழாவில் பங்கேற்பேன் என நினைத்ததுகூட பார்க்கவில்லை. எனினும் இன்று உள்ள சூழ்நிலையில் நாளை இந்தியாவிலேயே கேன்ஸ் போல் திரைப்பட விழா நடைபெற்றாலும் நடக்கும் என்று தீபிகா படுகோனே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *