“கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா”…. ஊர்வசி ரவுத்தலா அணிந்த முதலை நெக்லஸ் இம்புட்டு கோடியா?…. வெளியான தகவல்….!!!!

பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகைகள் வித விதமாக ஆடைகள், நகைகள் அணிந்து வந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அதன்படி பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா அணிந்து வந்த முதலை நெக்லஸ் பார்வையாளர்களை கவர்ந்தது. இதையடுத்து பலரும் அந்த நகை எவ்வளவு கோடி இருக்கும்? என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பிரபல நகை வடிவமைப்பாளர் ஊர்வசி அணிந்து இருந்தது போலியான நகை என சாடினார். அதாவது “கேன்ஸ் பட விழாவில் போலி நகையை அணிந்திருந்தது வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் பொக்கிஷமான பல்வேறு நகைகள் இருக்கிறது. அதை அணிந்திருக்கலாமே” என்று அவர் கூறினார். அதற்கு ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குழுவினர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் “ஊர்வசி ரவுத்தலா அணிந்திருந்தது ஒரிஜினல் நெக்லஸ் ஆகும். ரூ.200 கோடியாக இருந்த அந்த நெக்லஸ் விலையானது தற்போது ரூ.275 கோடியாக உயர்ந்து உள்ளது” என்று தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply