இந்தியாவின் பிரபல புனித தலங்களில் ஒன்றாகிய கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற கோவில்களுக்கு செல்பவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை இருந்து வருகிறது. இமயமலைப்பிரதேசம் என்பதால் அங்கு நெட்வொர்க் இன்றி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

அவசரத் தேவைக்கு உதவிக்கு கூட யாரும் அழைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. உலகில் அதிக இயற்கை பேராபத்துகள் நிகழும் இடங்களில் ஒன்றாக அப்பகுதிகள் இருப்பதால் அங்கு முறையான இணைய சேவை ஏற்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இனிமேல் 5ஜி சேவையை பெற இயலும்.

இதற்குரிய அறிவிப்பை கேதார்நாத் கோவில் நிர்வாகமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குளிர் காலம் முடிவடைந்த சூழலில், உத்தரகாண்டில் சார் தாம் யாத்திரை துவங்கியுள்ளது. இச்சிறப்பு சந்தர்ப்பத்தில் jio தன் ஜியோ ட்ரூ 5G சேவையினை சார் தாமா கோவில்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் உள்ள ஜியோ ட்ரூ 5ஜி பயனர்கள் கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி தாம் போன்ற இடங்களுக்கு போகும்போது ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க முடியும்.