கேஜிஎப் 2… “ராக்கி பாய் மீதான ஈர்ப்பு”…. சிறுவன் செய்த காரியம் பெரும் சோகம்….!!!!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது பெற்றோரும் உறவினர்களும் இன்று அதிகாலை அங்குள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆபத்தான நிலையில் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்த சிறுவன்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த முதல் கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ளது. அதன் பின் என்ன காரணத்தினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டிருக்கின்றனர்.

அதற்கு முதலில் பதில் கூறத் தயங்கிய  சிறுவன் அதன்பின் தனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் எனக்கூறி மருத்துவரிடம் நடந்ததை கூறி இருக்கின்றான். அதாவது கேஜிஎப் 2 படத்தை கடந்த வாரம் தான் அந்த சிறுவன் பார்த்துள்ளான். அப்போது அந்த படத்தில் கதாநாயகனாக வரும் ராக்கி பாய் மீது அவனுக்கு பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராக்கி பாய் போல கெத்தாக இருக்க வேண்டும் என தனக்குத்தானே உறுதி எடுத்துக்கொண்டு சிறுவன் அந்த கதாபாத்திரத்தை அப்படியே தனது நிஜ வாழ்க்கையிலும் காப்பி அடிக்க முயற்சி செய்துள்ளான்.

அந்தப்படத்தில் ராக்கி பாயாக நடித்த யஷ் தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவராக காட்டியிருப்பார். எனவே தானும்  சிகரெட் பிடித்தால் ராக்கி பாய் போல கெத்தாக இருக்க முடியும் என அந்த சிறுவன் நினைக்கவே நேற்று இரவு ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து இருக்கின்றான். முதன்முறையாக இத்தனை சிகரெட்டுகளை பிடித்ததால் அந்த சிறுவனின்  உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

தற்போது அந்த சிறுவன் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களை பொழுதுபோக்காக பார்க்காமல் அதனை உண்மை என நம்பும் இளம் தலைமுறையினர் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், அதனால் சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *