“கெத்தான லுக்கில் யோகி பாபு”…. இணையத்தை கலக்கும் லக்கி மேன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… செம வைரல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் அண்மையில் வெளியான பொம்மை நாயகி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து யோகி பாபு லக்கி மேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். உண்மையான அதிர்ஷ்டத்தை ஒரு மனிதன் எப்படி தன்னுடைய அதிர்ஷ்டத்தை வைத்து கண்டுபிடிக்கிறான் என்ற கோணத்தில் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது லக்கி மேன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் யோகி பாபு தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.