‘கூழாங்கல்’லை கைப்பற்றிய விக்கி- நயன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

‘கூழாங்கல்’ திரைப்படத்தின் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார் .

சமீபத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் . இந்நிலையில் அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூழாங்கல்’ என்ற படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இயக்குனர் வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர் . மேலும் யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .