கூரியர் டெலிவரி செய்யும் வாலிபர் பை திருட்டு… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ்…!!!

கூரியர் டெலிவரி செய்யும் வாலிபரின் பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை, முகலிவாக்கம் பட்டம்மாள் நகர்த் தெருவில் வாலிபர் ஒருவர் அந்தப் பகுதியில் இருக்கின்ற வீட்டிற்கு வந்த கூரியரை டெலிவரி செய்வதற்கு பைக்கை கொண்டு வந்து அங்கு நிறுத்தி உள்ளார். அந்த வீட்டிற்கு வந்த பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் இருக்கின்ற கூரியர் அடங்கிய பையை பைக்கின் மீது வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அதன்பின் டெலிவரி செய்துவிட்டு வந்து பார்த்தபோது கூரியர் பை காணாமல் போனது. இதைப்பார்த்து வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அங்கு இருந்தவர்களின் உதவியுடன் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கூரியர் பையை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. அந்த கூரியர் பையில் டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட்கள், செல்போன்கள், கிரெடிட் கார்டுகள் என விலை அதிகமுள்ள பொருட்கள் இருந்ததுள்ளது. இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் அந்த வாலிபர் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த இரண்டு நபர்கள் முகலிவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருக்கின்ற கழிவு நீர் தொட்டிகளில் மீதுள்ள இரும்பு முடிகளையும் திருடிச் செல்லும் நபர்கள் என்பதும், தொடர்ந்து காவல்துறையினருக்கு சவால்விட்டு அந்தப்பகுதியில் திருடி வருவதும் தெரியவந்துள்ளது. சவால் விட்டு குறிவைத்து திருடும் அந்த இரண்டு திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *