நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து என் தம்பி என்னுடைய முழு ஆதரவும் அவருக்குத்தான் என்று கூறி வந்த சீமான் தற்போது மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சீமான் கூறியதாவது, தமிழக வெற்றிக்கழகத்தின் அடிப்படைக் கொள்கை தவறு. விஜய் கூறுவது கொள்கை அல்ல கூமுட்டை. சாலையில் அந்த ஓரம் அல்லது இந்த ஓரம் நில். நடு ரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை கிடையாது கொடுநிலை என்று கூறினார்.
நான் குட்டி கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார் மற்றும் அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் படித்து பிஎச்டி முடித்து விட்டோம். நீங்கள் சங்க இலக்கியத்தை இனிமேல் தான் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியனின் பேரன் பேத்திகள் நாங்கள். வேலு நாச்சியார் யார் என்று சொல்லுங்கள் தம்பி. நான் வரவில்லை என்றால் வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் யார் என்பது தெரியாமல் போயிருக்கும். மேலும் நீங்கள் வைத்திருக்கும் கட்டவுட் நான் வரைந்தது தம்பி என்று கூறியுள்ளார். மேலும் சீமானி இப்படி மிகவும் கடுமையான வார்த்தைகளால் விஜயை தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.