கூட்டமாக வந்த விலங்குகள்…. குதிரைக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காட்டெருமைகள் தாக்கியத்தில் குதிரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில்விவசாயியான  மைக்கேல்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு குதிரை இருந்துள்ளது. இந்நிலையில் இவரது குதிரை ராயபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது  அந்த வழியாக வந்த  காட்டெருமைகள் மேய்ந்து கொண்டிருந்த குதிரையை பலமாகத் தாக்கி விட்டு  அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.  இதனால் பலத்த காயமடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்துவிட்டது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டெருமைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது. எனவே காட்டெருமைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *