சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு ‌ விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது, என்னை ஒவ்வொருத்தரும் அவங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சுட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல அவங்களுக்கு எங்க, என்ன பிரச்சனை நடந்தாலும், அவங்களோட உரிமைகளுக்காகவும், அவங்களோட உணர்வு பூர்வமாக இருப்பேன். எப்போதும் அப்படித்தான் இருப்பேன்.

மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்கள் அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் குரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்களோட சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த விகடன் குழுவிற்கும், வந்திருக்கும் பெரியோர்களுக்கும் சான்றோர்களுக்கும் மீண்டும் என்னுடைய வணக்கங்கள், நன்றிகள் என கூறியுள்ளார்.