தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன்…. ஜூலை-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு அமல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வரும் 31ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகளில் வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏதுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *