குஷியோ குஷி…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 2020-ஆம் ஆண்டு 63 லட்சம் கார்டுதாரர்களுக்கு இலவசமாக முகக்  கவசம் வழங்கியதற்கு ஊக்கத்தொகை வேண்டுமென மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 2020-ல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் வாயிலாக கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு முகக்  கவசங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. வினியோகம் செய்யப்பட்ட பணி கூடுதல் என்பதால் ஊக்கத்தொகை வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து கார்டுக்கு தலா 50 காசு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் 63.61 லட்சம் முகக்கவசம் வழங்கியதற்காக ஊழியர்களுக்கு தலா 50 காசு என மொத்தம் 31.80 லட்சம் ரூபாய் வழங்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக எந்தெந்த மாவட்டத்தில்  ஊழியர்களுக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்ற பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொகை ஊழியர்களின் சம்பள கணக்கில் வரவு வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *