“குஷியோ குஷி” மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில்…. தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மூத்த குடிமக்கள் சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் வரும் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னையில் வாழும் மூத்த குடிமக்கள் மாநகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த அரையாண்டிற்கான டோக்கன் வரும் 21 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை 40 மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *