ஜனவரி 2023 மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சற்று சிறப்பான மாதமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசு சார்பாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த மாதத்தில் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை வருகிறது.

ஜன. 14 – போகி பண்டிகை (சனி), ஜன. 15 – தை பொங்கல் (ஞாயிறு), ஜன. 16 – மாட்டு பொங்கல் (திங்கள்), ஜன. 17 – உழவர் திருநாள் (செவ்வாய்) ஆகிய தினங்களை விடுமுறைகளாக அரசு அறிவித்துள்ளது. எனவே வெளியூரில் இருந்து ஊருக்கு செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்து போக்குவரத்து துறையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.