
தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை காலை முதல் களைகட்ட தொடங்கியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில் வீட்டில் பொங்கல் வைத்து மகிழ்கிறார்கள். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை.
இதன் காரணமாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியாக சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு கூடுதலாக வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவித்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.